ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஆர்யன். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று(நவ., 5) சென்னையில் நடந்தது. இதில் விஷ்ணு விஷால் பேசியது : நான் நடித்த எப்ஐஆர், கட்டாகுஸ்தி வரிசையில் ஆர்யன் படமும் வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளர் ஆகவும் நான் மகிழ்ச்சி.
ஆர்யன் பட கிளைமாக்ஸ் குறித்து சில விமர்சனங்கள் வந்தன. ஒரு சிலர் அந்த கிளைமேக்ஸ் குறித்து வேறு கருத்து தெரிவித்தனர். என்றைக்கும் ரசிகர்களுடைய உணர்வை நான் ஏற்றுக் கொள்வேன் அதன்படி ஏற்கனவே நாங்க எடுத்து வைத்துள்ள இன்னொரு கிளைமேக்சை இன்று முதல் படத்தில் சேர்க்கிறோம் . புது கிளைமாக்ஸ்க்கு மக்கள் இன்னும் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். தெலுங்கிலும் புது கிளைமாக்ஸ்சுடன் படம் வெளியாகயுள்ளது.
அடுத்து இரண்டு வானம் , கட்டா குஸ்தி 2, அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். சினிமாவில் 25வது படத்தை தொடப்போகிறேன். தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து ஜெயிப்பது மகிழ்ச்சி. என் மகன் பெயரில் இந்த படத்தை தயாரித்தேன். படத்தின் தலைப்பும் அவன் பெயர்தான் படம், அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வகையில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆர்யன் படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்தது படத்திற்கு கூடுதல் பலம். ஷ்ரத்தா ஸ்ரீநாத் என் லக்கி ஹீரோயின்.
இவ்வாறு அவர் பேசினார்.