உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்'

பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்'

கமல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு தயாரான படம் 'விக்ரம்'. 1986ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, அம்ஜத்கான், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாணியில் உருவாகி இருந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த படம் வெளியான அதே தேதியில்தான் வி.அழகப்பன் இயக்கிய 'பூக்களை பறிக்காதீர்கள்' என்ற படம் வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படத்தின் சிறப்பு அம்சமே டி.ராஜேந்தர் இசை அமைத்திருந்ததுதான்.

படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அதேபோல விக்ரம் படத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல்களும் ஹிட்டானது. விக்ரம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் திணறிக் கொண்டிருந்தபோது எதிர்பார்ப்பே இல்லாமல் வெளிவந்த பூக்களை பறிக்காதீர்கள் படம் பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு வழியாக இரண்டு படங்களுமே 100 நாட்களை தொட்டது. 'விக்ரம்' படத்தில் பிரமாண்டம் இருந்தது. 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தில் எளிமையும், அழகும் இருந்தது. இரண்டு படத்தையுமே மக்கள் ரசித்தார்கள்.

அப்போது இளம் ஜோடிகளாக வலம் வந்த சுரேஷ், நதியா நடித்தார்கள். இவர்களுடன் வினு சக்ரவர்த்தி, ராஜீவ் உள்ளிட்டோர் நடித்தனர். கே.பி.தயாளனின் ஒளிப்பதிவு பரவலாக பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !