உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள்

ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‛பார்க்கிங், லப்பர் பந்து' என அடுத்தடுத்து இரு வெற்றி படங்களை தந்தவருக்கு இந்த தீபாவளிக்கு வெளியான ‛டீசல்' படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. முதன்முறையாக ஆக் ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து இந்த படத்தில் நடித்தார். இவர் நடித்த ‛நூறு கோடி வானவில்' என்ற படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் ஹரிஷை தேடி புதிதாக இரு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஒன்று பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் ஹரிஷ் உடன் இன்னொரு இளம் நடிகரும் நடிக்கிறார். மற்றொன்று ‛றெக்க, சீறு' போன்ற படங்களை இயக்கிய ரத்ன சிவாவின் படத்தில் நடிக்க போகிறார். இந்த இரு படங்களுமே கமர்ஷியல் உடன் கூடிய ஆக் ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !