ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம்
இப்போதெல்லாம் படம் தயாரிப்பது எளிது, வெளியிடுவது கடினம் என்கிற சூழ்நிலை உள்ளது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி ஒரு படம் ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் சுரேந்தர் இயக்கிய 'மாயபிம்பம்' படம் 5 வருட போராட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் வெளியாகிறது.
இதில் புதுமுகங்கள் ஹரிகிருஷ்ணன், ஆகாஷ் பிரபு, ராஜேஷ், அருண்குமார், ஜானகி நடித்திருக்கிறார்கள். நந்தா இசை அமைத்துள்ளார், எட்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சுரேந்தர் கூறும்போது படம் தயாராகி ஐந்தாறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. படம் பார்த்தவர்கள் 'பருத்திவீரன்', 'மைனா', 'சேது' போன்ற படங்களின் காதல் அனுபவங்களைப் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனாலும் வியாபாரம் என வரும்போது புது முகங்கள் என்கிறார்கள். அந்த இடத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காது என்கிறார்கள்.
இப்போது சிறு படங்களுக்கு மக்கள் வரவேற்பு தருவதாகச் சொல்கிறார்கள். இயக்குநர் ராம் சார் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவன் அவனுடைய மூன்று நண்பர்கள். இவர்கள் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாகவும் நட்பாகவும் இருக்கிறபோது எதிர்பாராத விதமாக ஏதோ ஒன்று செய்யப் போய் அது கடைசி எல்லை வரைக்கும் எப்படி அவர்களைத் துரத்துகிறது, எப்படி அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் கதை என்றார்.