‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ADDED : 8 hours ago
‛மான் கராத்தே, கெத்து' ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் 'ரெட்ட தல'. பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அருண் விஜய் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக ‛ரெட்ட தல' படம் அமைந்துள்ளது. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று அறிவித்துள்ளனர்.