ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி!
ADDED : 4 hours ago
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகர் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரியங்கா சோப்ரா உடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரின் கணவர் நிக் ஜோனாஸ் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் மற்றும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.