உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார்

'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார்

'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய், 44, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று(நவ., 10) காலை 4 மணியளவில் காலமானார்.

2002ம் ஆண்டு வெளிவந்த படம் 'துள்ளுவதோ இளமை'. தனுஷ் அறிமுகமான இந்த படத்தில் அவருடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய். தனுசின் நண்பராக நடித்தார். அதன்பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், 'பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, 'ஆரோகணம்', என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

44 வயதான அபிநய்க்கு கல்லீரல் தொற்று பிரச்னை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றார். அவர் உயிரை காப்பாற்ற 28 லட்சம் ரூபாய் தேவைப்படுதாகவும், நிதி உதவி செய்யுமாறும் நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அப்போது வேண்டுகோள் விடுத்தனர். கேபிஒய் பாலா உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர். சமீபத்தில் அவர் ஓரிரு சினிமா நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று நம்பிக்கையுடன் பேசினார்.

இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அபிநயக்கு உறவினர்கள் என்று பெரிதாக யாரும் இல்லை. ஓரிரு நண்பர்கள் மூலமே அவர் உதவி பெற்று வந்தார். அவர் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட யாரும் இல்லாமல் இருந்தது..

சினிமா பல பிரபலங்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற அதேவேளையில் இவரைப்போன்று ஓரிரு பிரபலங்கள் ஆள் ஆரவமற்று இறந்து போன சம்பவங்களும் அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது. குடி போன்ற தீய பழக்கங்களால் இவர் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளார்.

உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், யாராவது வந்தால் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இல்லை என்றால் நடிகர் சங்கம் சார்பில் அபிநய் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று நண்பர்கள் தெரிவித்தனர்..
இறுதியில் நடிகர் சங்கம் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர் முன்னின்று இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை கவனித்தனர். கடைசியாக அபிநய் குடும்பத்தில் உறவினர் ஒருவர் வந்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Matt P, nashvilletn
2025-11-10 18:39:11

குடியினால் கல்லீரல் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. நம்மக்கு நாமே சூன்யம் வைத்து கொள்கிறோம். திரை உலகம் பணம் கொழிக்கும் தொழில்.அதை பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.இருபத்தெட்டு லட்சம் திரட்ட முயற்சித்த அன்பர்கள் இறுதி சடங்குக்கு வழி செய்யலாமே. அவரு தான் போயாச்சு . இறுதி சடங்கு செஞ்சா திருப்பியா வந்திற போறார்.? அடக்கம் செய்யவாது வழியை பாருங்க. இல்லாட்டி ஆஸ்பத்திரிகள் பயன்படுத்தி கொள்ளலாம். அவரிடம் கொஞ்சம் வசதியா இருந்திருப்பின் நாங்கள் இருக்கிறோம் என தூரத்து உறவினர்களாவது வந்திருப்பார்கள். குடிக்கு செலவழிக்கும் பணத்தை ஒரு பெண்ணுக்கு கவனமாக செலவழித்திருந்தால் ஒரு நல்ல வாழ்க்கை ஏற்பட்டிருக்கலாம். குடிநயினால மறைந்த திரை பிரபலங்களில் இவரும் ஒருவர் போலிருக்கிறது.


Senthoora, Sydney
2025-11-10 13:57:57

நடிகர் சங்கம் இருக்கே, வெளிநாட்டில் தொழில் செய்வோருக்கு மரணம் ஏட்பட்டால், அங்கே நம்பர்கள் கைகொடுப்பார்கள், சினிமாஉலகில் இருப்பவர்கள் எல்லோருமே பணக்காரர்கள், ஏன் செய்யமுடியவில்லை. கப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் செய்திருப்பார்.