உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர்

ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர்


சென்னையில் நடைபெற்ற லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு லைவ் கான்சர்ட் நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நடிகர் ராம்சரண் மற்றும் நடிகை ஜான்வி கபூர் இருவரும் கலந்து கொண்டு மேடை ஏறினார்கள். இதில் முதல் முறையாக ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்திற்கு முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து 'சிக்ரி சிக்ரி' என்கிற லிரிக்கல் வீடியோ வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் ராம்சரணும் நாயகியான ஜான்வி கபூரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான சிக்ரி பாடலையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. அது பெத்தி படம் மூலமாக நிறைவேறிவிட்டது” என்று கூறினார். இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கி வரும் இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !