தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம்
ADDED : 1 hours ago
2023ம் ஆண்டு கேரளாவில் வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற படம் தி பேஸ் ஆப் தி பேஸ்லஸ் (முகமற்றவர்களின் முகம்). டிரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் சான்ட்ரா டிசோசா தயாரித்தார். ஷைசன் பி.உசுப் இயக்கினார். வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகவில்லை என்றாலும் பல்வேறு உலக நாடுகளில் திரையிடப்பட்டு 120க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
தற்போது இந்த படம் வருகிற 21ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் திரையிடப்படுகிறது. கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படம்.