உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா

நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா

பாலிவுட்டில் 70, 80களில் முன்னணி நடிகராக கோலோச்சியவர் நடிகர் தர்மேந்திரா. மூத்த நடிகரான இவர் 90 வயதை நெருங்கி உள்ளார். சமீபத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அதேசமயம் அவரை பற்றி தவறான செய்திகளும் பரவின. ''தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. என் தந்தையின் உடல்நிலை சீராகவும், முன்னேற்றமாகவும் உள்ளது. என் தந்தை விரைவில் குணமடைய உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என தர்மமேந்திராவின் மகள் இஷா தியோல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தர்மேந்திரா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்தபடி அவருக்கு வேண்டிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !