உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!


2012ம் ஆண்டில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய படம் 'கும்கி'. அப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை மதியழகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார் பிரபுசாலமோன். இந்த படமும் யானையை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது.

கும்கி -2 படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில், படத்தை நவம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி-2 படத்திற்கு இடைக்காலத் தடை போட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !