உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ?

மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ?


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷனை வைத்து 'சிக்மா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆச்சரியமாக இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இப்போது டைட்டில் அறிவிக்கப்பட்டது வரை நடிகர் விஜய் தனது மகனுக்கு இதுகுறித்து ஒரு வாழ்த்து செய்தியோ பாராட்டுக்களையோ தெரிவித்ததாக சோசியல் மீடியாவில் எந்த பதிவும் வெளியாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் தந்தையும் மகனும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் கூட கடந்த ஐந்து வருடங்களில் வெளியானது இல்லை.

விஜய் மட்டுமல்ல அவரது தாத்தா எஸ்.ஏ சந்திரசேகரன் கூட பொதுவாக தனது பேரன் பற்றி பொதுவெளியில் எங்கேயும் பேசுவதில்லை. இதற்கு ஜேசன் சஞ்சய் அவரது தந்தை மற்றும் தாத்தாவின் தலையீடு இல்லாமல் தனித்துவமாக தெரிய விரும்புகிறார் என்பது காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் விஜய் தரப்பில் வேறு விஷயம் ஒன்றை சொல்கிறார்கள்.

அதாவது விஜய் தனது முதல் படத்தில் அறிமுகமானதிலிருந்து அவரை ஒரு மிகப்பெரிய ஹீரோவாக நிலைநிறுத்தும் வரை அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் தான் பக்க பலமாக இருந்தார். அதே சமயம் விஜய்யின் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை விஜய்யால் சொந்தமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத சூழல்தான் இருந்தது. விஜய் அரசியலில் நுழைவது, அரசியல் கட்சி துவங்குவது வரை எல்லாமே விஜய்யின் தந்தை முடிவில் தான் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் விஜய்க்கு இதில் பெரிய உடன்பாடு இல்லாமல் இருந்தது.. வேறு வழியின்றி தான் தந்தையின் குறுக்கீடுகளை அவர் பொறுத்துக்கொண்டார். அதனால் தன் மகனும் அப்படி தன் அடையாளத்தின் பின்னால் வளர்வதை விஜய் விரும்பவில்லை. அவருக்கான அடையாளத்தை அவரே சுயமாக தேடிக் கொள்ளட்டும் என்று விஜய் கருதுவதாக சொல்கிறார்கள். அதேசமயம் மீடியா வெளிச்சத்துக்கு பின்னால் தந்தை - மகன் உறவு சுமூகமாகவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

Veeraputhiran Balasubramoniam, Chennai
2025-11-16 22:20:05

படத்துக்கு முதலீடு திமுக


SIVA, chennai
2025-11-13 21:17:40

ஊரான் பெத்த பிள்ளை சினிமா பார்த்து அரசியல் கட்சியில் சேர்ந்து உருப்படாமல் போக வேண்டும் , தன பிள்ளை மட்டும் நல்லா சம்பாதிக்க வேண்டும் , ஏன் என்றால் இவர் சுயநலமில்லாதவர் ....


Shekar, Mumbai
2025-11-13 20:21:06

அதெல்லாம் ஒன்னும் இல்லை ரெம்ப முன்னால் நிறுத்தினால், வெளிநாட்டு பிரஜையான இத பையன்னுக்கு ஏது இவ்வளவு பணம் அப்படின்னு ஐடி ஈடி எல்லாம் நோண்ட ஆரம்பிச்சுடும் அப்படிங்கிற பயம்தான்


என்றும் இந்தியன், Kolkata
2025-11-13 16:38:07

விரைவில் எதிர்பாருங்கள் ஒரு பெரிய செய்தியை விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய கொட்டாவி விட்டான் என்று. இந்த மாதிரி நடிகர்களை டப்பா டப்பா டப்பா அடித்து அவர்களை உலகில் மிக உயர்ந்த இடத்தில் வைப்பதே இந்த மாதிரி செய்திகள்


prabhu
2025-11-13 13:38:39

support panna nepo kid nu solluvinga, illana familya vittu vilagi irukar nu solluvinga..