உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம்

இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம்


நடிகை மஞ்சு வாரியரை பொறுத்தவரை புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே வரவேற்பு தருபவர். ஒரு பக்கம் சினிமாவில் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் காத்திருக்க, அவரோ பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித்தின் கோரிக்கையை ஏற்று அவர் இயக்கியுள்ள 'ஆரோ' என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மம்முட்டி தனது சொந்த கம்பெனி சார்பாக இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் நேற்று முன்தினம் வெளியானது. வெளியான இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்கள் இதை பார்த்து ரசித்துள்ளனர். இந்த குறும்படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரமும் தோற்றமும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !