சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை
ADDED : 3 minutes ago
அம்மன் படத்தில் நடித்து வரும், தாரா நடிகை, ஆரம்பத்தில் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்த போது சம்பள விஷயமாக பெரிதாக, கறார் காட்டவில்லை. தற்போது இப்படத்தை, ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதால், ஒரு மொழியில் மட்டுமே நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து விட்டு, இப்போது பல மொழிகளிலும் வெளியிடுவதால், கணிசமான அளவு தன் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நிற்கிறார். 'நான் கேட்கும் சம்பளத்தை தரவில்லை என்றால், படம் திரைக்கு வரும் போது நீதிமன்றத்தை அணுகுவேன்...' என்றும் மிரட்டல் விடுத்துள்ளார், நடிகை.