மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி'
ADDED : 20 minutes ago
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பெத்தி'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'சிக்ரி சிக்ரி' பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு நவம்பர் 7ம் தேதி வெளியானது.
தெலுங்கில் 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. பாடலுக்கு தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது தெலுங்கில் 64 மில்லியன், ஹிந்தியில் 25 மில்லியன், தமிழில் 4.5 மில்லியன், கன்னடத்தில் 4.2 மில்லியன், மலையாளத்தில் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்று மொத்தமாக 100 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் பெற்றுள்ளது. தெலுங்குப் பாடல் விரைவில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.