உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில்
நடிகை சமந்தா சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது பட தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இன்னொரு பக்கம் அவர் தீவிர உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது படம் குறித்த அறிவிப்புகள் வருகிறதோ இல்லையோ அவர் தினசரி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன அப்படி சமீபத்தில் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து ஆண்களுக்கு நிகராக கட்டு மஸ்தான வடிவமைப்பை பெற்றுள்ள தனது ஜிம் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
பலர் அவரது இந்த முயற்சியையும் அவரது தோற்றத்தையும் பாராட்டி இருந்தாலும் ஒரு சிலர் எதிர்மறை கருத்துக்களையும் பதிவிட தவறவில்லை. அதில் ஒரு ரசிகர் இதேபோன்று நீங்கள் செய்து கொண்டிருந்தால் உங்கள் உடல் ரொம்பவே மெலிந்து விடாதா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சமந்தா எப்போதாவது உங்கள் அறிவுரை தேவைப்பட்டால் அப்போது நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். சமந்தாவின் இந்த உடனடி பதிலும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.