ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் 2013ல் வெளிவந்த 'ராஞ்சான' படம் மூலம் அறிமுகமானார். அப்படம் 100 கோடி வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்து அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த 'ஷமிதாப்' படம் 2015ல் வெளிவந்தது. ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது.
அதன்பின் ஹிந்தியில் நடிப்பதற்கு ஒரு இடைவெளிவிட்டார் தனுஷ். 2021ல் அவர் நடித்த ஹிந்திப் படமான 'அத்ராங்கி ரே' படம் கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஓடிடி தளத்தில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மெய்ன்' இந்த வாரம் நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது. 'ராஞ்சனா, அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கிர்த்தி சனோன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'ராஞ்சனா' போன்ற மற்றுமொரு 100 கோடிக்கும் அதிகமான வசூலை தனுஷ், ஆனந்த் கூட்டணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட்டே 100 கோடி என்கிறார்கள்.