உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா?

தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா?

விக்னேஷ் வேணுகோபால் இயக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் நேற்று இந்த படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால் அதில் ஹீரோ அர்ஜுன் தாஸ் கலந்து கொள்ளவில்லை. ஏனென்று விசாரித்தால் சமீபத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. ஹீரோயின் தேஜூ அஸ்வினி , மற்ற குழுவினர் கலந்து கொண்டனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பட விழாவில் பேசியவர்கள் தவறாமல் குறிப்பிட்டனர்.

சமீபத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்த கும்கி 2 படம் வெளியானது. அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தமான படம் என்பதாலும் படக்குழுவில் சரிவர ஒத்துழைப்பு இல்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்த பல படங்கள் சுமாராக போன நிலையில் அவர் வில்லனாக நடித்த மாஸ்டர், குட் பேட் அட்லி, படங்கள் ஹிட்டாகியது. அதனால் அவர் கதாநாயகனாக நடிப்பதா? வில்லனாக தொடர்வதா என குழப்பதில் இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !