உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன்

கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன்


'வெண்ணிலா கபடி குழு' படத்தில் இடம் பெற்ற பரோட்டோ சூரி காமெடியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. அந்த காமெடியில் சூரிக்கு பரோட்டா சப்ளை செய்பவராக நடித்தவர் முருகேசன். இவர் பிற்காலத்தில் பரோட்டோ முருகேசன் என அழைக்கப்பட்டார். பல படங்களில் சின்ன, சின்ன கேரக்டரில் நடித்தார்.

தற்போது சுகவனம் இயக்கத்தில் இவர் கதைநாயகனாக நடித்துள்ள படம் 'ஒண்டிமுனியும், நல்ல பாடனும்'. கோவை கிராமப்புற பின்னணியில் இந்த கதை நடக்கிறது. தனது குல தெய்வமான ஒண்டிமுனிக்கு, நல்லபாடன் என்ற முருகேசன் கிடாய் நேர்ந்து விடுகிறார். இரண்டு பண்ணையார் பிரச்னை, ஈகோ காரணமாக அவரால் கிடாய் வெட்டி பூஜை நடத்த முடியவில்லை. அவர் என்னென்ன பாடு படுகிறார் என்ற ரீதியில் படம் செல்கிறது.

பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்த இந்த படம், கொங்கு பின்னணி, வட்டார வழக்கு, திரைக்கதை, நடிப்பு, கரு போன்ற காரணங்களுக்காக பலரால் பாராட்டப்பட்டுள்ளது. பல விருதுகளை அள்ளும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அர்ஜூனிடம் பல படங்களில் உதவியாளராக இருந்த சுகவனம் இயக்கியுள்ளார். சினிமா ஆசையில் ஒரு கட்டத்தில் சென்னையில் சுற்றி, இப்போது கோவையில் உரக்கடை வைத்திருக்கும் கருப்பசாமி என்பவர் தயாரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !