இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்'
ரீ ரிலீஸ் படங்கள் என்பது இப்போது டிரெண்ட் ஆகவே ஆகிவிட்டது. இந்த வாரம் வெளியாக உள்ள புதிய படங்களுடன் சேர்த்து இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது.
சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையில் அஜித், பூஜா மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த 'அட்டகாசம்', லிங்குசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் 2014ல் வெளிவந்த 'அஞ்சான்' ஆகிய இரண்டு படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன.
ஒரு படம் 21 வருடங்களுக்குப் பிறகும், இன்னொரு படம் 11 வருடங்களுக்குப் பிறகும் ரீ ரிலீஸ் ஆகிறது. இதில் 'அட்டகாசம்' படம் சுமாராகவே ஓடியது. 'அஞ்சான்' படம் இயக்குனர் லிங்குசாமியின் ஓவர் பில்டப்பால் தோல்வியில் முடிந்தது. பட வெளியீட்டிற்கு முன்பாக, 'மொத்த வித்தையையும் இந்தப் படத்துல இறக்கியிருக்கேன்' என்று அவர் ஓவராகப் பேசியதே படத்திற்கு வில்லனாகப் போனது.
ரீ ரிலீஸில் இந்த இரண்டு படங்கள் என்ன வரவேற்பைப் பெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.