உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி

பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி

நடிகை மீனாட்சி சவுத்ரி 'தி கோட்', 'லக்கி பாஸ்கர்', 'குண்டூர் காரம்' உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் அடுத்தகட்டமாக பாலிவுட் படங்களிலும் நடிக்க கவனத்தை திருப்பியுள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் மூலம் பாலிவுட்டில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல பாலிவுட் ஆக் ஷன் நாயகன் டைகர் ஷெரப் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக் ஷன் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விபரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !