சித்தார்த் அப்படிப்பட்டவர் இல்லை! - கார்த்திக் ஜி கிரிஷ்
ADDED : 63 days ago
'டக்கர்' படத்திற்கு பிறகு கார்த்திக் ஜி கிரிஷ்,சித்தார்த் கூட்டணியில் 'ரவுடி அண்ட் கோ' என புதிய படம் உருவாகி வருகிறது.
தற்போது இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, சித்தார்த் கிட்ட நிறைய விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். பலரும் அவர் முரண்டு பிடிப்பார் என கூறுவார்கள். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ரொம்பவே நேர்மையானவர். படப்பிடிப்பிற்கு அவர் சரியான நேரத்தில் வர வேண்டும் என நாம் விரும்பினால், அவர் வந்து நிற்பார். அதே போல நாமும் சரியான நேரத்திற்கு இருக்கணும்னு எதிர்பார்ப்பார். இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் நடித்தது இல்லை என்பதால் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார் என கூறினார்.