மலையாளத்தில் அறிமுகமாகும் துஷாரா விஜயன்!
ADDED : 63 days ago
தமிழில் 'சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன், வீர தீர சூரன்' போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன்.
தமிழில் அவர் நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார் துஷாரா விஜயன். அதன்படி, மலையாளத்தில் பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் பிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 'காட்லான்' படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.