உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு

500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு


தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'மன சங்கர வர பிரசாத் காரு'. பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இதில் சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் தங்களது திரையுலக பயணத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிரஞ்சீவியும், வெங்கடேஷும் இணைந்து ஆடிப்பாடும் பாடல் ஒன்று தற்போது ஹைதராபாத்தில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பாடலில் கிட்டத்தட்ட 500 நடன கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். விஜய் போலகி இந்த பாடலுக்கு நடனம் வடிவமைத்து வருகிறார். ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் இந்த பாடல் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !