உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்

சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்

தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா நடிக்கும் 46 வது படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இதற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ், இந்த படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதில், இப்படம் நல்லதொரு பேமிலி சென்டிமெண்ட் கலந்த கமர்ஷியல் கதையில் உருவாகி இருக்கிறது. தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அல வைகுந்தபுரம் படத்தைப் போன்று இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பு வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு படம் வருகிற ஜனவரி 26ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, யோகிபாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !