ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ்
ADDED : 15 minutes ago
1993ம் ஆண்டில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், நெப்போலியன், நம்பியார், மனோரமா, மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் 'எஜமான்' . இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் 50 வருட திரைபயணத்தை கவுரவிக்கும் விதமாக எஜமான் படத்தை வருகின்ற டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு 8கே தொழிநுட்ப தரத்தில் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.