ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதன்பிறகு 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது' போன்ற படங்களில் நடித்தவர், தற்போது 'ராம் இன் லீலா' என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.
இதில் 'ஆண்பாவம் பொல்லாதது' படம் 5 கோடியில் தயாரிக்கப்பட்டு 23 கோடி வரை வசூலித்தது. இதன் காரணமாக தற்போது ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா', ஆண்பாவம் பொல்லாதது படத்தை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராகிறது. மேலும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், ''ரியோ ராஜ் தனது பெயரை ரியோ என்று வைத்துக் கொள்ள வேண்டும். காரணம் ரியோ ராஜ் என்று சொல்லும் போது இறங்கும் முகத்தில் இருப்பது போல் உள்ளது. அதனால் ரியோ என்று வைத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்னும் பெரிய நடிகராக அவர் வளருவார்'' என்று தனது கணிப்பை தெரிவித்தார். இதன் காரணமாகவே தற்போது இந்த ராம் இன் லீலா படத்தில் இருந்து தனது பெயரை ரியோ என்று வைத்திருக்கிறார் ரியோ ராஜ்.