5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்!
ADDED : 11 minutes ago
திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், சமீபத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்த 'ரிவால்வர் ரீட்டா' என்ற படமும் திரைக்கு வந்தது. இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாத நிலையில் அடுத்து கீர்த்தி சுரேஷின் கவனம் படம் இயக்குவதில் திரும்பியிருக்கிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எதிர்காலத்தில் திரைப்படம் இயக்குவது சம்பந்தமாக பல கதைகளை ஆலோசித்து வருகிறேன். என்னிடம் உள்ள கதைகளை ஸ்கிரிப்ட்டாக வடிவமைத்து விரைவில் அந்த படங்களை தான் இயக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதனால் அடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே படம் இயக்குவதிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்துவார் என்பது தெரியவந்துள்ளது.