மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்!
ADDED : 7 minutes ago
கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த '24 ஹவர்' பந்தயத்தில் 922 போர்ஷோ கார் பிரிவில் அஜித்குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அப்போது அஜித்குமார் 414 எண் காரை ஓட்டியிருந்தார். அதற்காக அவருக்கு 'ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் இத்தாலியில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக மலேசியாவில் நடைபெறும் 24 எச் சீரிஸ் கார் ரேசில் பங்கேற்கிறார் அஜித்குமார். இதற்காக தற்போது மலேசியா சென்றுள்ள அவர், அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.