தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா!
ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள 'தேரே இஷ்க் மே' என்ற படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதனால் இன்னும் சில தினங்களில் இப்படம் 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது 'போர் தொழில்' படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் தனது 54வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை ஒரு மாறுபட்ட திரில்லர் கதையில் இயக்கி வரும் விக்னேஷ் ராஜா, இயக்கும் ஸ்டைலை பார்த்து அவரை பாராட்டி உள்ள தனுஷ், இந்த படமும் ஏற்கனவே நான் நடித்த 'ஆடுகளம்' படத்தைப் போன்று பல விருதுகளை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், விக்னேஷ் ராஜா இயக்கிய போர் தொழில் படத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் தற்போது இந்த தனுஷ் 54வது படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.