உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல்

கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல்


கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. அவருடன் கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கி உள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 12ம் தேதி வெளிவருகிறது.
இப்படத்துக்காக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது தாயாருடன் இணைந்து பாடிய ஒரு பாடல் வைரலாகி வருகிறது.

எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா' என்ற படத்தில் இடம்பெற்ற 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடலை தனது தாயாருடன் இணைந்து ரீமிக்ஸ் செய்து சந்தோஷ் நாராயணன் பாடி உள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக கார்த்தி நடித்திருப்பதால் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக உரிய முறையில் உரிமம் பெற்றிருப்பதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !