உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025?

'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025?


தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் 11 மாதங்களில் 250 படங்களுக்கு மேல் வெளியாகி உள்ளன. 100 கோடி கடந்த வசூல் படங்கள் என 'டிராகன், குட் பேட் அக்லி, தலைவன் தலைவி, மதராஸி, டியூட்' உள்ளன. 500 கோடி மேல் வசூல் கடந்த ஒரே படமாக 'கூலி' என இருந்தது. இவற்றில் மிகப் பெரிய லாபம் தந்த படமாக 'டிராகன்' மட்டுமே அமைந்தது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதுபோக, 'டூரிஸ்ட் பேமிலி' படம் ரூ.83 கோடி வசூலித்து, அதிகளவு லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பிளாக் பஸ்டர் வெற்றியாக லாபத்தை வைத்து வேண்டுமானால், 'டிராகன்' படத்தைக் குறிப்பிடலாம். ஆனால், மொத்த அதிக வசூலில் அப்படி ஒரு படம் இந்த ஆண்டில் அமையவில்லை என்பது ஒரு குறையான விஷயம். மற்ற மொழிகளில் மலையாளத்தில் 'லோகா', கன்னடத்தில் 'காந்தாரா சாப்டர் 1', தெலுங்கில் 'சங்கராந்திகி வஸ்துனம்', ஹிந்தியில் 'ச்சாவா, சாயாரா' ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றி, வசூல் படங்களாக அமைந்தன.

1000 கோடி வசூலை தமிழ் சினிமா இந்த ஆண்டில் முதன் முதலில் பெறும் என்று வருடத்தின் துவக்கத்தில் பேச்சு வந்தது. ஆனால், அது நடைபெறாமலேயே போய்விட்டது. 2026ல் அப்படி ஒரு படம் வருமா ? காத்திருப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !