உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம்

அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம்


போயபாடி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படம் 'அகண்டா 2'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

நாளை வெளியாக உள்ள இப்படத்திற்கான முன்பதிவு தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் இன்னும் ஆரம்பமாகவில்லை. பொதுவாக பெரிய தெலுங்குப் படங்கள் வெளியாகும் போது தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகள் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கும்.

ஆந்திர அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அந்தப் பகுதிகளில் முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது. ஆனால், தெலுங்கானாவில் இதுவரை ஆரம்பமாகவில்லை. இன்று இரவு படத்திற்கான பிரிமியர் காட்சிகளையும் திட்டமிட்டுள்ளார்கள். மதியத்திற்கு மேல் முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !