அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன்
விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'தி கோட்' படத்திற்குப் பிறகு கடந்த ஒரு வருட காலமாக வேறு எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கிறார் வெங்கட் பிரபு. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தப் படம் எப்போது ஆரம்பமாகும் என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது.
அந்தப் படத்திற்கு முன்னதாக 'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும் சொன்னார்கள். ஆனால், சில விவகாரங்களால் இந்தப் படமும் இன்னும் தள்ளிப் போகிறது என்கிறார்கள். இருந்தாலும் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம்.
அப்படத்தின் தோற்றத்திற்காக 'தி கோட்' படத்திற்காகச் சென்ற அமெரிக்கா ஸ்டுடியோவான லோலா ஸ்டுடியோவிற்காக செல்லப் போகிறார்களாம். சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கப் போகிறார்களாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை சிவகார்த்திகேயனின் அடுத்த படம் எது என்பதில் ஒரு குழப்பம் நீடிக்கும் என்றே தெரிகிறது.