உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி

படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி

லெனின் வடமலை இயக்கத்தில் பிரபாகரன் நடிக்கும் யாரு போட்ட கோடு படத்தில், ஆருத்ரா, ஸ்கெட்ச், பாண்டமுனி படங்களில் ஹீரோயினாக நடித்த மெகாலி நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல்நாள்தான் இந்த படத்தில் அவர் கமிட்டாகி இருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''இந்த கதையை எழுதிவிட்டு ஹீரோயின் தேடினோம். புதுமுக ஹீரோ, புது கம்பெனி என்பதால் பலர் தயங்கினார்கள். ஒரளவு தெரிந்த ஒரு ஹீரோயினை கமிட் செய்தோம். ஆனால், அவரும் படப்பிடிப்பு தொடங்குகிற நேரத்தில் திடீரென எஸ்கேப்பாகி விட, ஹீரோயின் இல்லாமல் தவித்தோம். அப்போது டான்ஸ் மாஸ்டர் தினேசிடம் நிலைமை சொன்னபோது, அவர்தான் மெகாலியை அனுப்பி வைத்தார். அவரை பார்த்தவுடன் இந்த படத்தின் டீச்சர் கேரக்டருக்கு அவர் செட்டாவார் என தோன்றியது. மறுநாளே அவரை வைத்து படப்பிடிப்பு தொடங்கினோம். பாடல்காட்சி எடுத்தோம்' என்றார்.

ஹீரோயின் மெகாலி பேசுகையில் ''படக்குழு நிலைமை புரிந்து நடிக்க ஓகே சொன்னேன். டீச்சர் கேரக்டர், படத்தில் இடம் பெற்ற சமூக அக்கறை விஷயங்கள் எனக்கு பிடித்து இருந்தது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !