உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு

வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு


நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், கிர்த்திஷெட்டி நடித்த ‛வா வாத்தியார்' படம், நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட பேன்டசி கதைக்கு யு சான்றிதழ் கிடைக்காமல் யு/ஏ என்பது ஏன் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. யு/ஏ 7+ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெற்றோருடன் பார்க்கக்கூடிய படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோர்ட் தடை, தயாரிப்பாளரின் பண செட்டில்மென்ட் நல்லபடியாக முடிந்து படம் சொன்னபடி ரிலீஸ் ஆகிடுமா என்று கார்த்தி ரசிகர்களும், படக்குழுவும் பதைபதைப்பில் இருக்கிறார்கள். இன்றும் சட்டரீதியான தடை குறித்த விஷயத்தில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா ‛தங்கலான், கங்குவா' பட விவகாரத்தில் பண பிரச்னையில் மாட்டியதால், முந்தைய படங்களின் பைனான்ஸ் பிரச்னைகளால் தவித்தார். ஆனாலும், பல தடைகளை மீறி இந்த படத்தை வெளியிட உள்ளார். பெரிய படம் என்பதாலும், படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருப்பதாலும் அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு படம் வெளியாக வாய்ப்பு. கார்த்தியின் முந்தைய படமான ‛மெய்யழகன்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைபோல் இந்த படமும் ஹிட்டாகும் என படக்குழுவினர் சொல்கிறார்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !