உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்

ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்

சினிமாவில் சில படங்களின் கதாபாத்திரங்கள், அதில் நடித்த நடிகர்கள், நடிகர்கள் அவர்களது சிறந்த நடிப்பால் பல வருடங்களுக்குப் பிறகும் பேசப்படுவார்கள். அப்படியான சில கதாபாத்திரங்களில் இன்று ரீரிலீஸாகும் 'படையப்பா' படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் அமைந்தது. அக்கதாபாத்திரத்திற்காக முதலில் ஐஸ்வர்யா ராயிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பிறகே ரம்யா கிருஷ்ணனைத் தேர்வு செய்து அவரை நடிக்க வைத்தோம் என சமீபத்திய பேட்டியில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

'நீலாம்பரி' கதாபாத்திரமும், அதில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் பேசப்படுகிறது. இனிமேலும் பேசப்படும்.

அதுபோல இந்தியத் திரையுலகில் முதல் 1000 கோடியைப் பதிவு செய்த 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜ மாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரம். ஒரு கம்பீரமான நடிப்பை அந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். அக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை ஸ்ரீதேவியைத்தான் அணுகினார்கள். ஆனால், அவர் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனைத் தேடிப் போனது.

கதாநாயகியாக பல படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாலும், நீலாம்பரி, சிவகாமி தேவி கதாபாத்திரத்திங்கள் அவருக்கு ஒரு மகுடத்தைக் கொடுத்த கதாபாத்திரங்களாக அமைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !