'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
ADDED : 26 days ago
தெலுங்கில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி தற்போது அவரது 157வது படமாக 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' எனும் படத்தில் நடித்துள்ளார். இதனை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மற்றும் கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு 20 நிமிடம் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு மனா சங்கரா வரபிரசாந்த் காரு படம் ஜனவரி 12ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். தெலுங்கில் ஜனவரி 9ந் தேதியன்று பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.