வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே!
தமிழில் 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தி உள்ளிட்ட சில மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, இசைக்கலைஞர் பெனடிக் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமான வன்முறை காட்சிகளையே படமாக்கி வியாபாரம் பார்க்கின்றனர். பல பிரபலங்களை தவறாக சித்தரித்து வேதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சூழலில் என்னுடைய குழந்தையை நான் வளர்க்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.
ஆனால் ராதிகா ஆப்தேவின் இந்த கருத்துக்கு சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதாவது, 'ரத்த சரித்திரா, பத்லாபூர், சேக்ரேட் கேம்ஸ்' என அவர் நடித்த பல படங்கள் கிராபிக்ஸ் வன்முறைகளை மையமாகக் கொண்ட கதையில்தான் உருவாகி இருந்தன. அதனால் அப்படிப்பட்ட படங்களில் இவரே நடித்துவிட்டு இப்போது அதற்கு எதிராக எப்படி கருத்துக் சொல்லலாம் என்று பலரும் ராதிகா ஆப்தேவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.