உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல்

இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராமின் கொம்புசீவி படத்தில் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கிறார். சரத்குமாருக்கு முக்கியமான வேடம். ‛ஓ போடு' ராணியின் மகள் தார்ணிகா ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சென்னையில் நடந்த விழாவில் யுவன் பேசுகையில் ''விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் திருமணம் முடிந்து, எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார்கள். அப்போது சிறுவனான நான் அவர்களை என் கசின்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி வரவேற்றேன். அது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்துக்கு இசையமைத்தேன். அதற்கு முன்பே அலெக்சாண்டர் படத்துக்கு மறைமுகமாக பின்னணி இசை அமைத்து இருக்கிறேன். இந்த படத்தில் ஒரு அம்மா சென்டிமென்ட் பாடல் உள்ளது. அதை நானும் அப்பா இளையராஜாவும் இணைந்து பாடியுள்ளோம். இந்த படத்தின் கதை கேட்டதும், விஜயகாந்த் மகன் ஹீரோ என்றதும், எந்த மறு பேச்சும் சொல்லாமல் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசுகையில் ''நானும், யுவன் அம்மா ஜீவாவும் பல ஆண்டுகளாக ப்ரண்ட்ஸ். இளையராஜா படங்கள் வெளியாகும்போது எங்களை படம் பார்க்க அழைப்பார். அதேபோல் விஜயகாந்த் படங்கள் வந்தால், நான் அவர்களை அழைப்பேன். அந்த அளவுக்கு நட்பாக இருந்தோம். சின்ன வயதில் இருந்தே யுவனை தெரியும். சமீபத்தில் என் அம்மா மறைந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அந்த அம்மா பாடலை கேட்டு, நானும், எங்கள் குடும்பத்தினரும் அழுதோம். அதேபோல், பொன் ராம் படங்கள், பாடல்கள் என் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !