அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில்
ரஜினி நடித்த படையப்பா படத்தின் ரீ ரிலீசுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு தியேட்டரில் நேற்று இரவு படம் பார்த்துவிட்டு, ரஜினி இளைய மகள் சவுந்தர்யா கூறுகையில் ''கடந்த வெள்ளிக்கிழமையே நான் படம் பார்த்து இருக்க வேண்டும். அப்பாவுடன் திருப்பதி சென்றதால் படையப்பா பார்க்க முடியவில்லை. இப்போது படத்தை ரசித்தேன். பாடல்கள் மட்டுமல்ல, ரஜினியின் அந்த ஊஞ்சல் சீனை கூட ஒன்ஸ்மோர் கேட்கிறாார்கள். ரசிகர்கள் விருப்பத்தை தியேட்டர்காரர்களும் நிறைவேற்றினார்கள். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. படையப்பா என்பது எமோஷன். இந்த படத்தை 10 தடவை கூட பார்ப்பேன். நீங்களும் பாருங்கள். பட ரீ ரிலீசில் அப்பா சந்தோஷம். அவர் கொடுத்த பேட்டியை பார்த்தாலே தெரியும். அவரை வைத்து நான் படம் பண்ண நேரம், காலம் அமைய வேண்டும். கமல் தயாரிப்பில் அப்பா நடிப்பது உறுதி. விரைவில் இயக்குனர் அறிவிக்கப்படுவார், அதை நானோ, அக்காவோ இயக்க வாய்ப்பில்லை''என்றார்.