உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம்

விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‛கொம்பு சீவி' படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார். அவர் விஜயகாந்த் குறித்து கூறுகையில் ''நான் ஒரு கட்டத்தில் படம் தயாரித்து மிகவும் சோர்வாக இருந்த சமயத்தில் விஜயகாந்திடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் வாய்ப்பு கொடுத்தார். அந்தசமயத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பல மாதங்கள் படப்பிடிப்பு செல்ல முடியாத நிலை. எனக்கு அதில் சின்ன ரோல்தான். என் காட்சிகளை நீக்கிவிட்டு, மற்றொரு நடிகரை வைத்து படத்தை முடித்து இருக்க முடியும். ஆனால், எனக்காக சில மாதங்கள் காத்திருந்து நடிக்க வைத்தார். புலன் விசாரணை படம் பார்த்துவிட்டு உங்களுக்கு புகழ் கிடைக்கும் என்றார். எந்த ஹீரோவும் சொல்லாத வார்த்தை அது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் நடித்து இருக்கிறேன். நாங்கள் சாப்பாட்டை பரிமாறிக் கொள்வோம். அவர் உயரமாக இருக்கிறார். அவரை தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் என்பேன். அவருக்கும், ஹீரோயினுக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !