உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்

அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்

2025ம் ஆண்டில் எஞ்சியுள்ள இரண்டு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பதே இப்போதைய நிலைமை.

இந்த வாரம் டிசம்பர் 19ம் தேதி ஜேம்ஸ் கேமருனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார் 3 - பயர் அண்ட் ஆஷ்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. 'அவதார்' சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு உண்டு. இந்த மூன்றாம் பாகப் படத்தையும் பார்த்து ரசிக்க ஹாலிவுட் பட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு நேரடி தமிழ்ப் படங்களுக்குக் கிடைப்பதைப் போல அதிகத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதனால், இந்த வாரம் ஓரிரு தமிழ்ப் படங்களே வெளியாக உள்ளன. சரத்குமார், சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'கொம்பு சீவி' படம்தான் இந்த வாரத்திற்கான முக்கியத் தமிழ்ப்படம். இந்தப் படத்தை 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தவிர ஓரிரு சிறிய பட்ஜெட் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை உறுதியாக வருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !