உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருண் விஜய்க்காக பாடிக் கொடுத்த தனுஷ்

அருண் விஜய்க்காக பாடிக் கொடுத்த தனுஷ்

அருண் விஜய், சித்தி இதானி நடிப்பில் டிசம்பர் 25ம் தேதி வெளி வருகிறது ரெட்ட தல. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் மான்கராத்தே, உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து படங்களை இயக்கிய திருக்குமரன், கிரிஷ் திருக்குமரன் என்ற பெயரில் இயக்குகிறார். ரெட்ட தல என்ற தலைப்பை ஏ.ஆர்.முருகதாஸ் தான் வைத்து இருந்தாராம். அவரின் சிஷ்யன் என்ற முறையில் உரிமையுடன் வாங்கியிருக்கிறார் கிரிஷ். பதிலுக்கு அவரிடம் என் கம்பெனிக்கு நீ ஒரு படம் இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் முருகதாஸ்.

இவர்கள் கூட்டணியில் வந்த மான்கராத்தே படம் பெரிய ஹிட்டாகி, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுறையை ஏற்படுத்தியது. அந்த நன்றிகடனுக்குதான் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்தார் அருண் விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், தனுஷ் அழைப்புக்காக மாறினார் அருண் விஜய். பதிலுக்கு ரெட்ட தல படத்திற்காக, சாம் சி. எஸ். இசையில் ஒரு பாடலை பாடிக் கொடுத்து இருக்கிறார் தனுஷ். ரெட்ட தலயில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அருண்விஜய். ஒருவர் கெட்டவர், இன்னொருவர் அவரை விட கெட்டவர் என்ற ரீதியில் திரைக்கதை செல்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !