நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் பெரிய ஹிட் ஆனது. ஜெயிலர் பாடல் வெளியீட்டு விழாவில் அந்த பாடலை குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த் தன்னால் தமன்னாவுடன் சேர்ந்து ஆட முடியவில்லை என காமெடியாக பேசினார்.
இப்போது ஜெயிலர் 2 படத்தில் அந்த மாதிரியான துள்ளல் பாடலுக்கு நோரா பதேகி டான்ஸ் ஆடி வருகிறார். அந்த பாடல் காட்சி சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்படுவதாக தகவல். காவாலா பாடலை போல் இந்த பாடலும் ஹிட்டடிக்க வேண்டும் என்று ஜெயிலர் 2 படக்குழு தீவிரமாக வேலை செய்து இருக்கிறதாம்.
நோரா பதேகி கனடாவை சேர்ந்தவர், பல ஹிந்தி படங்களில் பல கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் ஆடியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு தெரிந்தவர், பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலுக்கு ஆடியிருக்கிறார். கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படத்திலும் டோர் நம்பர் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.
33 வயதான இவரின் சம்பளம் சில கோடிகள். இந்த பாடலில் ரஜினி இருக்கிறாரா? இல்லை, காவாலா மாதிரி ஓரமாக ஆடிவிட்டு செல்கிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக உள்ளது.