உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை

முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை


மலையாள சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட முதல் 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. சதித் திட்டத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வழக்கில் திலீப் விடுதலை செய்யப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தீர்ப்பை பலரும் நேரடியாகவே விமர்சித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கூறினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !