உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய்

தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய்

அருண் விஜய் தனது ரெட்ட தல குறித்து பேசுகையில் குடும்பம், உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி குறித்தும் விரிவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛அப்பா விஜயகுமார், நான், என் மகன் அர்ணவ் இணைந்து மை டாக் படத்தில் நடித்து விட்டோம். இப்படி 3 தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் இருக்கிறார்கள்.

என் படங்கள் குறித்து அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். குறிப்பாக, என் சகோதரிகள், என் மனைவி குறை, நிறைகளை தெளிவாக சொல்வார்கள். இப்போது இளைய தலைமுறையான என் மகனிடமும் கருத்து கேட்கிறேன். மை டாக் படத்துக்குபின் அவனுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போதைக்கு படி, அப்புறம் முடிவெடுக்கலாம் என சொல்லியிருக்கிறோம். நான் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குகிறேன்.

நான் சாப்பிடும் கலோரிகளை அன்றைக்கே கரைத்துவிட வேண்டும் என்பது என் பாலிசி. கேரக்டருக்கு ஏற்ப என் உடல் அமைப்பை, எடையை முடிவு செய்கிறேன். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே அரிசி சாதம் சாப்பிடுகிறேன். மற்றபடி எண்ணெய் இல்லாத புரோட்டின், மீன் சாப்பிடுவேன். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ், மற்றும் கருவேப்பில்லை சாப்பிடுவேன். குறிப்பாக, தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தரமில்லாத தண்ணீர் முகத்தை, உடலை, நம் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பது என் கருத்து. என் உடல் அமைப்புக்கு என் பெற்றோர்களின் ஜீன், அவர்கள் கொடுத்த ஆரோக்கிய டிப்ஸ், உணவும் ஒரு முக்கிய காரணம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !