உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர்

மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர்


செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறவர் எஸ்.எஸ்.லலித்குமார். 'துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா, லியோ' உள்ளிட்ட படங்களை தயாரித்தார். தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மற்றும் 'சிறை' படத்தை தயாரித்து வருகிறார்.

சிறை படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அனந்தா அவர் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தனது மகன் அக்ஷய் குமாரை நடிப்பு களத்தில் இறக்கி உள்ளார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

படத்தில் வரும் இளம் ஜோடிகளாக இவர்கள் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இதனை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். அக்ஷய்குமார், அனிஷ்மா நடிக்கும் பாடல் 'மின்னு வட்டம் பூச்சி' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !