உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை

பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை


வளர்ந்து வரும் இளம் ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாஷா. 'பழைய வண்ணாரப்பேட்டை' படம் மூலம் அறிமுகமானார். ரிஷி ரிச்சர்டு நடித்த 'ருத்ர தாண்டவம்', சிம்பு நடித்த 'பத்து தல', செல்வராகவன், நட்டி நடித்த 'பகாசூரன்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாகார்ஜூனா உள்பட பலருடன் 500க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகியுள்ள 'குற்றம் புரிந்தவன்' தொடரில் இவரது பணி பரவலான பாராட்டை பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 'குற்றம் புரிந்தவன்' இந்த அளவு பாராட்டுக்களைக் குவிக்கும் என நினைக்கவில்லை. எல்லோரும் என் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக திரைப்படங்களுக்கும், சீரிஸிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோயிஸம், உச்சகட்டங்கள் எதுவும் சீரிஸில் இருக்காது. சீரிஸ் முழுக்க இயல்பான டிராமா இருக்கும்.

இந்தக் கதை குற்றம் புரிந்தவனின் மனநிலை சம்மந்தப்பட்டது. அதை திரையில் கொண்டு வர, முழுக்க க்ரே டோனில், நிஜத்தில் ஒரு ரூமில் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ அதே போல் ஒளிப்பதிவு செய்தோம். இப்போது ரசிகர்கள் தனியாக குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒரு பெரிய பீரியட் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது என் கனவு. நல்ல திரைக்கதை, நல்ல டிராமா படங்களில் அடுத்தடுத்து வேலை பார்க்க ஆசை. குற்றம் புரிந்தவன் சீரிஸிற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வருகிறது. இயக்குநரின் கனவை அவர் நினைத்தது போல், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி திரையில் கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !