உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல்

காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல்

ஹிந்தியில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள தேரே இஸ்க் மெயின் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கிர்த்தி சனோன். இந்த படத்தில் நடித்து வந்தபோது தனுசும், அவரும் காதலிப்பதாக வதந்திகளை பரவின. அதையடுத்து தற்போது தொழிலதிபர் கபீர் பஹியாவுடன் கிர்த்தி சனோன் டேட்டிங் செய்து வருவதாக செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காதல் மற்றும் உறவுகள் குறித்த தனது கண்ணோட்டத்தை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛காதல் மீதான எனது நம்பிக்கை காதலுக்கு அப்பாற்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுகிறது. நான் உண்மையிலேயே காதலை நம்புகிறேன். அனைவருக்கும் காதல் தேவை. அது வெறும் காதல் மட்டும் அல்ல எல்லாவற்றிற்கும் அன்பு. அன்பு தான் நமக்கு தேவை'' என்று கூறியுள்ளார் கிர்த்தி சனோன். மேலும், தேசிய விருது வென்ற பிறகு அழுத்தமான மற்றும் கமர்சியல் கலந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !